முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றில் 23,570 நபர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மைப் பணி

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் வைகை ஆற்றில் 23,570 நபர்கள் பங்கேற்ற தூய்மைப் பணி மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது.
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்க்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கத்தில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் 15.09.2017 முதல் 02.10.2017 வரை பல்வேறு தூய்;மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வைகை ஆற்றில்  ேடகம் முதல் அங்காடிமங்கலம் வரையும், மாநகராட்சியின் சார்பில் குருதியேட்டர் காமராசர் பாலம் முதல் ஓபுளாபடித்துறை வரையும் நடைபெற்ற மாபெரும் தூய்மைப்பணியில் மொத்தம் 23,570 நபர்கள் பங்கேற்றனர்.  மாநகராட்சியின் சார்பில் குருதியேட்டர் காமராசர் பாலம் முதல் ஓபுளாபடித்துறை வரையுள்ள 7 கிலோ மீட்டர் நீளமுள்ள வைகை ஆற்றில் 35 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் 485 நபர்கள் வீதம் மொத்தம் 17,060 நபர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில் மதுரை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், வரி வசூலிப்பவர்கள், தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், அம்மா திட்டப் பணியாளர்கள், மண்கூட்டும் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் என சுமார் 4000 நபர்களும், பல்வேறு கல்லூரியை சார்ந்த 8060 மாணவ, மாணவிகளும், நாட்டுநலப்பணி, தேசிய மாணவர்படை, மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட 5000 நபர்களும் என மொத்தம் 17,060 தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாநகராட்சியின் சார்பில் 6 ஜே.சி.பி. இயந்திரங்களும், 8 டிப்பர் லாரிகளும், 3 மினி ரோபோக்களும், 20 டிராக்டர்களும், 20 டம்பர் பிளேசர்களும், 1 மண்கூட்டும் வாகனமும், 1 நடமாடும் கழிப்பறையும் பயன்படுத்தப்பட்டது.
முன்னதாக வைகை ஆற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர்   தலைமையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை தலைவர்  சைலேஷ் குமார் யாதவ், இ.கா.ப. மதுரை மாநகர் காவல் துறை ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால், இ.காப., உதவி ஆட்சியர் (பயிற்சி)  ரஞ்சித் குமார், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.குணாளன், துணை ஆணையாளர்  ப.மணிவண்ணன், நகர்நல அலுவலர்  சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர்கள்  அரசு,  பழனிச்சாமி,  ரமேஷ்,   கௌசலாம்பிகை, நகரமைப்பு அலுவலர்  ஐ.ரெங்கநாதன், உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்;திரவேல், செயற்பொறியாளர் (தெருவிளக்கு)  செந்தில், காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து