முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயிலில் பழங்கால சிலை திருட்டு: 37 ஆண்டுகளாக வழக்கு தாமதம் - சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கண்டனம்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கோயில் சிலை திருட்டு வழக்கை 37 ஆண்டாக தாமதப்படுத்தி வரும் சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித் துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தக்ஷகேஸ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்குள்ள பழங்கால அரிய சுவாமி சிலை ஒன்று கடந்த 1981-ம் ஆண்டு திருட்டு போனது. அந்தச் சிலை நியூயார்க் நகருக்கு கடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் அகர்வால் முன்னிலையில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தீவிர கவனம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் சிபிஐ.க்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். தனது உத்தரவில் நீதிபதி அகர்வால் கூறியதாவது:

பத்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், 37 ஆண்டாக இந்த வழக்கு தொடர்கிறது. வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார். அதுகுறித்த தகவல் கூட நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. வழக்கறிஞரை மாற்றுவதற்கு முன்னர், வேறு ஒரு வழக்கறிஞரை முன்கூட்டியே சி.பி.ஐ நியமித்திருக்க வேண்டும்.

வழக்கு இறுதி கட்ட விசாரணையில் இருக்கும்போது சி.பி.ஐ அலட்சியமாக உள்ளது. சிலை திருட்டு தொடர்பாக சி.பி.ஐ.தான் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அதன் கடமை. இதுதொடர்பாக உள்துறை செயலர், சி.பி.ஐ இயக்குநர் ஆகியோர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து