நத்தம் அருகே காரில் சந்தன கட்டை கடத்தல் 4 பேர் காருடன் கைது.

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2017      திண்டுக்கல்
sandal news

 நத்தம், -: திண்டுக¢கல் மாவட்டம்,  நத்தம் அருகே சமுத்திராபட்டியில் காவல் துறையினரின் சோதனை சாவடி உள்ளது. இதில் நேற்று முன் தினம் அதிகாலையில் அங்குள்ள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக  வேகமாக வந்த பதிவு எண் பெறப்படாத புதிய காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் ரம்பம், கடப்பாறை போன்ற ஆயுதங்கள் காரில் இருப்பது  கண்டுபிடிக¢கப்பட்டது.
        இது குறித்து அந்த காரில் உள்ள நபர்களை போலீசார் விசாரணை செய்தனர்.  இதில் அய்யலு£ர் வடுகபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(52), அருண்(27), சுந்தர்(29),  பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த வெள்ளையன்(50) என்பதும் தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள் முன்னுக¢குப் பின் முரணாக பேசியதையடுத்து போலீசார் சந்தேகப்பட்டு காரை முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பகுதியில் உள்ள டிக¢கியை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 200 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகளை காரில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன் சுப்பிரமணி, அருண் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சந்தன கட்டைகளையும் மேலும்அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக¢டர் பார்த்திபன் விசாரணை செய்தார்.
       தொடர்ந்து நத்தம் வனச்சரகர் பாண்டியராஜன், வனவர் கருணாநிதி ஆகியோரிடம் போலீசார் கைதுசெய்யப்பட்ட 4 பேரையும் சந்தனக¢ கட்டைகளுடன் காரையும் ஒப்படைத்தனர். இதையட்டி இந்த சந்தன மரம் எங்கிருந்து  கடத்தி வரப்பட்டது என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து