மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து57 ஆயிரத்து 228 வாக்காளர்கள்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      மதுரை
mdu news 1 0

  மதுரை, -           மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.
            இது குறித்து கலெக்டர் வீரராகவராவ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
                       மதுரை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 12 லட்சத்து 56 ஆயிரத்து 908 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 84 ஆயிரத்து 477 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 112 பேரும் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்பு ஜூலை மாதம் வரை 31 ஆயிரத்து 525 மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி உள்ள 29 ஆயிரத்து 385 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன.
                இதனை தொடர்ந்து இன்று 10 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 343 ஆண்வாக்காளர்களும், 12 லட்சத்து 92 ஆயிரத்து 765 பெண் வாக்காளர்களும், 120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 28 ஆயிரத்து 422 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
                 மேலூர் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 11 வாக்காளர்களும், மதுரை கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 500 வாக்காளர்களும், சோழவந்தான் தனிதொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரம் 782 வாக்காளர்களும், மதுரை வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 373 வாக்காளர்களும், மதுரை தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 718 வாக்காளர்களும், மதுரை மத்திய தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 450 வாக்காளர்களும், மதுரை மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 599 வாக்காளர்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 478 வாக்காளர்களும், திருமங்கலம் தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 5 வாக்காளர்களும், உசிலம்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 312 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
       வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்திட இன்று முதல் 31ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குசாவடி மையங்கள், மாநகராட்சி துணை ஆணையர் அலுவலகம், மதுரை மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் மண்டல அலுவலகங்கள், அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் இந்த பணி நடைபெறுகிறது. மேலும் வருகிற 8,22 ம் தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடைபெறுகிறது. இதனை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து