முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 979 வாக்காளர்கள்: கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளதாக ஆட்சியர் என். வெங்கடேஷ் தெரிவித்தார்.வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவதுசிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2018 மேற்கொள்வது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.இதில் 06.01.2017 முதல் 15.09.2017 வரை பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 05.01.2017 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 7801 ஆண்கள், 9,270 பெண்கள் மற்றும் 7 திருநங்கைள் ஆக மொத்தம் 17,078 வாக்காளராக சேர்க்கப்பட்டும்,  இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறி சென்றவர்கள் ஆகியோர் 11,606 பேர் நீக்கம் செய்யப்பட்டும், இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 6,95,093 ஆண் வாக்காளர்கள் 7,17,798 பெண் வாக்காளர்கள் மற்றும் 88 திருநங்கைகள் சேர்த்து ஆக மொத்தம் 14,12,979 வாக்காளர்கள் உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 1562 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவ்வாக்குச்சாவடிகள் 857 மையங்களில் அமைந்துள்ளது. 01.01.2018-ல் 18 வயது நிறைவு பெற்றவர்கள் (அதாவது 01.01.2000க்கு முன்பு பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச் சாவடி மையங்களில் 03.10.2017 முதல் 31.10.2017 வரையிலான நாட்களிலும், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களான 08.10.2017 மற்றும் 22.10.2017 (ஞாயிற்று கிழமைகள்) ஆகிய நாட்களிலும் படிவம் -6-ல் விண்ணப்பத்தை அளிக்கலாம். மேலும் ”elections.tn.gov.in” & “www.nvsp.in <http://www.nvsp.in>”  என்ற இணையதள முகவரிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான 25.01.2018 அன்று பெற்றுக்கொள்ளலாம்.சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2017-ன் போது மொத்தம் 46,737 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 4,760 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2017-ன் போது மொத்தம் 46,737 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 4,760 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும் பெறப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வாக்காளர் பட்டியலைப் பெற்றுக் கொண்டனர்.  மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், பயிற்சி ஆட்சியர் சரவணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து