செங்கம் தமிழ்ச்சங்கம் சார்பில் புதிய புத்தகங்கள் - மு.பெ.கிரி எம்.எல்.எ வெளியிட்டார்.

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      திருவண்ணாமலை

செங்கம் தமிழ்ச்சங்கம் கணேசர் குழுமம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகல்வித்துறை இணைந்து செங்கத்தில் 10நாள் புத்தகத்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ் இலெமூரியா இதழ் ஆசிரியர் மும்பை குமணராசன் எழுதிய செய்நன் விதைகள் என்னும் நூல் வெளியிடப்பட்டது.

புத்தகத்திருவிழா

செங்கம் தொகுதி எம்.எல்.எ மு.பெ.கிரி வெளியிட செங்கம் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்கறிஞர் கஜேந்திரன் பெற்றுக்கொண்டார் தலைவர் பேராசிரியர் வணங்காமுடி நூல் ஆய்வுரை பேசினார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஆர்.ரவிசந்திரன் எழுதிய நீங்களும் ஆகலாம் அப்துல்கலாம் என்ற நூலினை பேராசிரியர் அப்துல்காதர் வெளியிட்டு தனித்தமிழர் என்ற தலைப்பில் பேசினார். ஊத்தங்கரை அதியமான கல்வி நிறுவன தாளாளர் திருமால் முருகன் நூலினை பெற்றுக்கொண்டார். கோவை சதாசிவம் பறவைகளோடு பறப்போம் என்ற தலைப்பில் பேசினார் தினமனி நாளிதழ் முதன்மை செய்தியாளர் பெங்களுர் முத்துமணி வாழ்த்தி பேசினார்

நிகழ்ச்சிகளில் தீத்தாண்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விஷ்னுபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேபென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சுண்டக்காபாளையம் சத்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது. விழாவில் பொருளாளர் ஆசிரியர் ஜெயவேல் டாக்டர் வி.பி.ராஜ் மெடிக்கல்ஸ் ராஜீ ரியல் எஸ்டேட் சேட்டு உள்ளிட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து