சின்னமட்டாரபள்ளி ஊராட்சி ஓதிகுப்பம் சோமநாக்கன் ஏரி மழைநீரால் வெள்ள பெருக்கு: கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரபள்ளி ஊராட்சி ஓதிகுப்பம் சோமநாக்கன் ஏரி மழைநீரால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நிரம்பியுள்ளதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை ஜே.சி.பி.எந்திரம் மூலம் அகற்றும் பணிகளை கலெக்டர் சி.கதிரவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஓதிகுப்பம் கிராமத்தில் ஏரியை சுற்றி ஆய்வு செய்து மணல் மூட்டைகளை கொண்டு ஏரி கரைபகுதிகளை பலபடுத்தும் பணிகளை தூரித படுத்தினார். அப்பகுதியில் சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் வருவதால் உடனடியாக இரண்டு கல்வெட்டுகளை அமைக்க ஊரக வளர்ச்சித் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நடுநிலைப்பள்ளி அருகே செல்லும் ஒடையில் நீர் வரத்து அதிக அளவில் உள்ளதால் ஓடை கால்வாய்கள் அருகே உள்ள வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டார். வருவாய் துறை மூலம் ஆகிரமிப்புகளை உடனடியாக அற்றவும் வீடுகள் காலி செய்யும் குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துகொடுக்க உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலை உள்ள காளி கோயில் கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சாலையின் குறுகே உயர்மட்ட கல்வெட்டு அரிப்பு ஏற்ப்பட்டதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு பணிகள் அமைத்துவருகின்றனர். கூடுதலாக மணல் மூட்டைகளை வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து காளிகோயில் கிராமத்தில் மலை கிராமத்திற்கு செல்லும் சாலை மழை வெள்ளதால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மணல் மூட்டைகள் தற்போது வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்யும் சுழ்நிலை உள்ளதால் கிராம பொதுமக்கள் விழிப்புடண் இருக்கவும், அவ்வப்போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண் 1077 - க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கலெக்டர் பர்கூர் ஆற்று பகுதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டார். பர்கூர் பேருராட்சி பகுதியில் ஆற்றுபகுதியில் அதிக அளவில் மழை நீர் செல்வதால் ஆகிரமிப்புகளை அகற்ற கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். இவ்வாய்வின் பொது பர்கூர் வட்டாட்சியர் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி பையாஸ்அகமது, மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து