முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் ஐப்பசிவிசு திருவிழா நேற்று (9ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி விசு திருவிழா  நேற்று (9ம் தேதி) காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.  கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் மகாபிN~கம் செய்யப்பட்டது. பின்னர் கொடிபட்டம் கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்திற்கு முன் எழுந்தருளினர். கொடியேற்று வழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

நிகழ்ச்சி

இலஞ்சியிலிருந்து திருவிலஞ்சி குமாரர் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதுவரை தினமும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிN~கம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 13ம் தேதி  காலை 8.20 மணிக்கு மேல் நான்கு தேர்கள் ஓடும் தேரோட்டம் நிகழ்ச்சியும், 15 ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு வெள்ளைசாத்தி தாண்டவ தீபாராதனையும், 16 ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரைசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனையும், 18 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஐப்பசிவிசு தீர்த்தவாரி மற்றும் 12 மணிக்கு திருவிலஞ்சி குமாரர் பிரியா விடை கொடுக்கும் வைபவமும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்படுகளை குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருக்கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் சாத்தையா, உதவி ஆணையர் செல்வக்குமாரி மற்றும் கட்டளைதாரரர்கள், உபயதாரர்கள், கோவில் பணயாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து