கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : கலெக்டர் கு.கோவிந்தராஜ் உத்தரவு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      கரூர்
Karur 2017 10 09

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று நடைபெற்றது.

 விதவை உதவித்தொகை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 256 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தாராஜ், ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பாக மாற்றுதிறனாளியை நல்ல நிலமையில் உள்ளவர்கள் திருமண செய்துகொண்டமைக்கான நிதியுதவி திட்டம் மற்றும் மாற்றுதிறனாளி மற்றொரு மாற்றுதிறனாளியை திருமண செய்துகொண்டமைக்கான நிதியுதவி திட்டத்தின் கீ;ழ் 8 தம்பதிகளுக்கு ரூ.2 இலட்சத்து 75 ஆயிரத்திற்கான நிதியுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுர்யபிரகாஷ், சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து