முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடன் உதவிகள் ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மன்னார் வளைகுடா சமுதாய கூடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் 24 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் உதவியாக ரூ.1 கோடி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக 41 ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.74 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளையும்  வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதமாக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறும் இவ்விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நேரடி வங்கி கடனுதவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் உதவித்தொகை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 மேலும் தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலனை பாதுகாத்திடம் விதமாக மீன்வளத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.4,000-த்திலிருந்து ரூ.5,000-மாக உயர்த்தி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை கடற்படையினர் மூலம் சிறைபிடிக்கப்பட்ட நமது மீனவர்களை விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நமது மீனவர்களின் படகுகளை பத்திரமாக மீட்கவும், சிறைபிடிக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்து மீட்க இயலாத நிலையிலிருந்த படகுகளுக்கு உரிய வாழ்வாதார உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 அதேபோல, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தங்கச்சிமடம் பகுதியிலுள்ள சின்னபாலம் கிராமத்தில் கடல் அலை அரிப்பு தடுப்பு சுவர், பாம்பன் கிராமத்தில் உள்ள தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார். இவ்விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்.பி.ஜெயஜோதி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வி.ஜெயராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து