முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணிக்கு ஷேவாக் பாராட்டு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய ஹாக்கி அணிக்கு முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் வீரேந்தர் ஷேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

10-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வங்காள தேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டியில் 7-0 என்ற கணக்கில் வங்காள தேசத்தையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நேற்று முன்தினம் எதிர் கொண்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் சிங் லென்சனா (17-வது நிமிடம்), ரமன்தீப்சிங் (43-வது நிமிடம்), ஹர்மனபிரித்சிங் (45-வது நிமிடம்) ஆகியோரும் பாகிஸ்தான் தரப்பில் அலிஷானும் (49-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய ஹாக்கி அணிக்கு முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் வீரேந்தர் ஷேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறும்போது,-

‘‘ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஹாக்கி அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பரிசை முன்னதாக கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான வி.வி.எஸ். லட்சுமண் கூறும் போது, ‘‘ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது மிகவும் அற்புதமானது. இந்திய ஹாக்கி ஆணியை பற்றி நாடே பெருமை அடைகிறது’’ என்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முகமது கயூப், ஆகாஷ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீரர் தகன்நரங், முன்னாள் ஹாக்கி வீரர் வீரென் ஆகியோரும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து