முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் 46வது ஆண்டு துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

 

தேனி - பெரியகுளத்தில் அதிமுக கட்சியின் 46வது ஆண்டு துவக்க விழா நேற்று வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மூன்றாந்தல் பகுதிக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா தலைமையில் திரண்டு வந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். இக்கொண்டாட்டத்தில் நகர செயலாளர் என்.வி.ராதா, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், சிறுபான்மை பிரிவு அபுதாஹீர், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன், கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் நாராயணன், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷம், கூட்டுறவு சங்க இயக்குநர் அன்பு, அண்ணா தொழிற்சங்கம் முபாரக், வார்டு செயலாளர்;கள் வழக்கறிஞர் தவமணி, ஏர்செல் ரபீக்அகமது, காஜாமுயுனுதீன் மற்றும் கிட்டு, ராஜவேல், முருகவேல், ராஜாங்கம் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து