முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகையில் முதல் தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.

வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் டிரம்பின் மகள் இவன்கா, இந்திய - அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தக் கொண்டாட்டத்தில் அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன்ஸ் ஆணையத்தின் தலைவர் அஜித் பட்டேலும் கலந்து கொண்டார்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் பேசியபோது, “நாங்கள் தீபாவளியை கொண்டாடுகிறோம். இதன் மூலம் இந்து மதத்தின் வீடாகவும், உலகிலேயே பெரிய ஜனநாயகமாக உள்ள இந்திய மக்களை நாங்கள் நினைவில் வைத்து கொள்கிறோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் கொண்டுள்ள பலமான உறவை மதிக்கிறேன்"என்றார்.

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியபோது, ”நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நாம் அனைவரும் அமைதியும், ஒளியும் ஏற்பட இருளை எதிர்த்துப் போராடுவோம்” என்றார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா முதல்முதலாக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் தீபாவளியைக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து டிரம்ப் தற்போது வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து