முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வராக தான் இருந்தபோது கேதார்நாத் கோயிலை சீரமைக்க முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதிக்கவில்லை பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

கேதார்நாத்: குஜராத் முதல்வராக தான் இருந்தபோது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலை மறுசீரமைக்க, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலுக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தரிசனம் செய்தார்.

பின்னர், அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கேதார்நாத்தை மிக முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் மட்டுமின்றி, இங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலையும், காடும் மக்களை ஈர்க்கிறது. இதன் இயற்கை சூழல் மாறாமல் சீரமைப்புப் பணிகள் உரிய காலத்தில் நடத்தி முடிக்கப்படும்.

2013-ம் ஆண்டில் பலத்த மழை - வெள்ளத்தால் கேதார்நாத் கோயில் பாதிக்கப்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நான், கோயிலை சீரமைக்க முன் வந்தேன். உத்தரகாண்ட் அரசு, முதலில் அதை ஏற்றது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதற்கு தடை போட்டது. டெல்லியில் இருந்து வந்த உத்தரவால், உத்தரகாண்ட் அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அந்தப் பணியை செய்ய எனக்கு கடவுள் மீண்டும் வாய்ப்பளித்துள்ளார். பிரதமராக தற்போது அந்தப் பணியை செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து