முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,- .திண்டுக்கல் மாவட்டம்நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்திபெற்றது ஆகும். இக்கோயிலின் திருவிழாக்களில் முக்கியமானது ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவாகும். இவ்விழா மேளதாளம் முழங்க கோவில் முன்பாக உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் திருக்கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து யாகசாலை ப10ஜையை செங்குறிச்சி ஜமீன்தார் சுந்தரவடிவேல் ராஜா தொடங்கி வைத்தார். லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.
 >> 25-ந் தேதி புதன்கிழமை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. 26-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்ஆராதனைகள் நடைபெறும். தினமும்  பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறும். விழாவில் தினமும் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து