முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்யை வளைத்துப்போடும் அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை: தமிழிசை ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடிகர் விஜய்யை வளைத்துப்போட பா.ஜ.க திட்டமிடவில்லை. அப்படி ஒரு அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  அவர் கூறுகையில், ‘’திரைப்படங்களில் மத்திய அரசைப் பற்றியோ, திட்டங்கள் பற்றியோ விமர்சிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு தவறான தகவல்களை இடம்பெறச் செய்துள்ளனர்.

திரைப்படங்களில் மத்திய அரசைப் பற்றியோ, திட்டங்கள் பற்றியோ விமர்சிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு தவறான தகவல்களை இடம்பெறச் செய்துள்ளனர். - தமிழிசை செளந்திரராஜன்

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள், கருத்துச் சொல்லும் உரிமை பா.ஜ.க.வினருக்கும் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். பா.ஜ.க.வுக்கு எதிரானது என்றதும் அனைவரும் ஒன்றிணைந்து எங்களை விமர்சித்து வருகிறார்கள். மக்கள் உண்மையை அறிவார்கள்.

மெர்சல் படத்தை எதிர்ப்பது போல எதிர்த்து அப்படத்துக்கு விளம்பரம் தேடித் தருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார். அவருக்கு கற்பனை வளம் அதிகமாக இருப்பதையே இது காட்டுகிறது. நடிகர் விஜய்யை வளைத்துப்போட பா.ஜ.க திட்டமிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அப்படி ஒரு அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை'' என்று தமிழிசை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து