முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகாடு மலைப்பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து 5 மணி நேரம் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம்;, புலிக்குத்திக்காடு வழியாக பாச்சலூர், கே.சி.பட்டி, பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு தினசரி அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக சென்று வருகிறது. நேற்று அதிகாலை சுமார் 6.00 மணியளவில் ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் செல்லும் சாலையில் பெரியபாறை அருகே மிகப்பெரிய வெக்காளிமரம் வேறுடன் சாய்ந்தது. இதனால் கே.சி.பட்டி - ஒட்டன்சத்திரம், பாச்சலூர் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - கொடைக்கானல் செல்லும் அரசு பேருந்துகள், தனியார் எஸ்டேட் வாகனங்கள், உள்பட ஏராளமான வாகனங்கள் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால், சாலை ஆய்வாளர் மாசிலாமணி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த சாலை பணியாளர்கள் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை மின் ரம்பத்தின் மூலம் மரத்தை அறுத்து போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து