முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் சீமான், அமீர் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை ராமநாதபுரம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
     ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி தமிழ் திரையுலகத்தின் சார்பில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
       இதற்காக நேற்று காலை இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நேரில் ஆஜராகினர். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் சீமான், அமீர் ஆகியோரை மேற்கண்ட வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இந்த வழக்கில் சீமான், அமீர் தரப்பில் வக்கீல்கள் சோமசுந்தரம், டோமினிக் ரவி ஆகியோர் ஆஜராகினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து