திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 216-வது நினைவு நாள்

24 sivagangai

 சிவகங்கை -இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 216-வது நினைவு தினம் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு       கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜீ    கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்  ஓ.எஸ்.மணியன்    வருவாய்த்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார்    கதர் மற்றும் கிராம தொழில்கள்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன்    தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்  மாவட்ட ஆட்சித் தலைவர்  க.லதா, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  பிஆர்.செந்தில்நாதன்   மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
              பின்னர், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிற்கு   அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
              இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மற்றும் முக்கியப் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
              இவ்விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.சீதாலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (செய்தி) கருப்பணராஜவேல் மற்றும் (விளம்பரம்) முகமது ரியாஸ், திருப்பத்தூர் வட்டாட்சியர் சுமதி, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து