ஊட்டி எஸ்.எம்.மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      நீலகிரி
25ooty-1

ஊட்டி எஸ்.எம். மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

டெங்கு விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் குன்னூர் சாலையில் இயங்கி வரும் எஸ்.எம் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையை சுகாதாரமாக பேணப்படாததாலும், மருத்துவமனை கழிவுகளை சரியான முறையில் கையாண்டு அகற்றப்படாததாலும் அந்த மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். தொடர்ந்து இனிவரும் காலங்களில் மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இதுபோன்று இனி சுகாதாரமின்றியும், சுத்தமான பராமரிப்பும் இல்லாத மருத்துவமனைகள் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் சிவகாமி, நகராட்சி ஆணையாளர்(பொ) ரவி, நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர், வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து