கோபி குண்டேரிபள்ளம் அணை கனமழையாள் முழு கொள்ளளவை எட்டியது

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      ஈரோடு
vlcsnap-2017-10-25-15h07m54s842

கோபிசெட்டிபாளையம் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அணையின் முழுகொள்ளவான 42 அடியை நீர் நெருக்கியுள்ளது. அதனால் வினோபாநகர் கொங்கர்பாளையம் வாணிப்புத்தூர்.

உள்ளட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வருவாய்துறையினர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
 ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மழை இல்லாது போனதால் மூன்று ஆண்டுகளாக நீர் வரத்தின்றி வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் கடந்த மாதங்களில் அணையின் அருகில் உள்ள கிராமமக்கள் மழைவேண்டியும் அணை நிரம்பவேண்டியும் வனதேவதைகளுக்கு பொங்கல்வதைது படையலிட்டு வழிபாடு செய்தனர். இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக குன்றி விளாங்கோம்மை மல்லியம்மன்துர்க்கம் கம்மனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழைபெய்துள்ளது. அதனால் இன்று அதிகாலை முதல் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. விநாடிக்கு ஐந்தாயிரம் கனஅடிக்கும் மேல் வந்த மழைநீரினால் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயந்துள்ளது. 30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அணையின் முழு கொள்ளவான 42 அடியை நெருங்கியுள்ளது.

இதனால் அணையின் அருகில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தின் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணையின் நீர் மட்டம் உயந்துள்ளதையடுத்து அணையிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்ற நிலைமை உள்ளதால் வினோபாநகர் கொங்கர்பாளையம் தோப்பூர் கோவிலூர் வாணிப்புத்தூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வருவாய்துறையினர் சார்பில் தண்டோர அடித்தும் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் கால்நடைகள் மேய்க்கவோ வேறு தேவைகளுக்காகவோ யாரும் ஓடையில் இறங்கவேண்டாம் என்றும் கரையோரம் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து