100 சதவீதம் டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வரை டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகள் தொடரும்: கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      சேலம்
1

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகளை கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (27.10.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்விற்கு பின் கலெக்டர் தெரிவித்ததாவது.

நடவடிக்கை தொடரும்

 

தமிழ்நாடு முதலமைச்சர் டெங்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணிகளில் 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பூலாவரி மற்றும் புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று காலை 07.00 மணி முதல் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 

ஆய்வின் போது பெரும்பாலான வீடுகளில் தண்ணீரினை மூடி வைக்காமல் திறந்த வைப்பதினால் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் லார்வாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் கொசு புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு கொசு புழு உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கையோடு பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாம் டெங்கு இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க முடியும். சேலம் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக 100 சதவீதம் உருவாக்கும் வரை டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார். இந்த ஆய்வில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் .பி.மனோன்மணி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து