முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு குறித்த உறுதிமொழி: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் நினைவு நாளினை ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் தேசிய ஒருமைப்பாடு குறித்து முழக்கங்கள்ஃபாடல்களுடன் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உறுதிமொழி
அதனடிப்படையில் இன்று (31.10.2017) மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியினை கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்;ச்சியில் சாதி, இன வட்டார, மத அல்லது மொழி பாகுபாடுகள் எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்றும் அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக் கொள்வோம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து