கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான - 13 பேருக்கு பணி நியமன ஆணை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      கிருஷ்ணகிரி
1

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, பட்டுவளர்ச்சித்துறை மற்றும் ஆதிதிராவிடர்நலத் துறையில் சார்பில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் கலந்துக்கொண்டார்.

பணிநியமன ஆணை

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, பட்டுவளர்ச்சித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து பணிகாலத்தில் மரணமடைந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் அவர்கள் வழங்கினார். வருவாய்த்துறையில் சுதாகர்,, அரவிந்தராஜா, நந்தகுமார், இளம்பரிதி, ஜெயசித்ரா, திருமி.கோகிலா, மரகதம், லஷ்மிகாந்தன், நளாயினி, குமார் ஆகியோருக்கு கிராமநிர்வாக அலுவலர் பணிநியமன ஆணையும், மஞ்சுநாத் தபெ. என்பவருக்கு பதிவறை எழுத்தர் பணிநியமன ஆணையும், சுமதி என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணிநியமன ஆணையும், ஆதிதிராவிடர் நலத்துறையில் பாஸ்கர் என்பவருக்கு சமையலர் பணிநியமன ஆணையும் கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சிவசங்கரன் , கலெக்டர் அலுவலக மேலாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து