முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதாரமற்ற தேனீர் மற்றும் உணவகங்களுக்கு தலா ரூ.7000 வீதம் ரூ.35,000 அபராதம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விதித்தார்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பீ.பீ குளம், காமராசர் 2வது தெரு, புலித்தேவன் தெரு போன்ற இடங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ், மேற்கொண்டார்.
  இந்த ஆய்வின் போது, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பீ.பீ குளம் பகுதியில் அமைந்துள்ள 5 தேனீர் மற்றும் உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையிலும், ஆக்கிரமித்தும் செயல்பட்டதால் அதன் உரிமையாளர்களிடம் தலா ரூ.7000 வீதம் ரூ.35,000 அபராத தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விதித்தார்.  அதனைத்தொடர்ந்து  பீ.பீ குளத்திலுள்ள கால்வாய்களில் பொதுமக்கள் எவரும் குப்பைகளை போட வேண்டாம் என்றும், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 
  பீ.பீ குளம் கண்மாயிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.  பின்னர் காமராசர் 2வது தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக சென்ற, அங்குள்ள தண்ணீர் சேமிக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களில் ஏ.டி.எஸ் கொசுப்புழுக்கள் வளர்வதை தடுப்பதற்கான அறிவுரைகளை வழங்கி, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அங்குள்ளவர்களிடம் அறிவுரை வழங்கினார்.
  புலித்தேவன் தெருவில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் பெண் ஒருவர் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டதை பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அப்பெண்ணை அழைத்து பாராட்டு தெரிவித்து, இதுபோல் இப்பகுதியிலுள்ள அனைவரும் தங்களது குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுமாறு அறிவுரை வழங்கினார்.
  அதனைத்தொடர்ந்து சொக்கிகுளம், ஆதிதிராவிடர் அரசு மாணவிகள் விடுதியில் தீடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்  மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, மாணவிகளிடம் வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
  இந்த ஆய்வின் போது மதுரை வடக்கு வட்டாட்சியர் திரு.சிவக்குமார், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து