முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மைநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் தொழிற்சாலை வணிக வளாகங்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -அம்மைநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் தொழிற்சாலை வணிக வளாகங்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பேருராட்சியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய்  திண்டுக்கல் மண்டலம் பேரூராட்சிகளின் இணைஇயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில்  டெங்கு போன்ற மர்மக்காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக அம்மைநாயக்கனூர் பேருராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில்¢ பேருராட்சி பணியாளர்களுடன் சுகாதாரத்துறையினர்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மைநாயக்கனூர் நகரின் அனைத்து வீதிகளின் வழியாக சென்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து தொழிற்சாலை வணிக வளாகங்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
இதுகுறித்து பேருராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் கூறுகையில் தற்போதுள்ள சூழலில் விசக்காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய்  திண்டுக்கல் மண்டலம் பேரூராட்சிகளின் இணைஇயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் இன்று தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அம்மைநாயக்கனூர் அனைத்து வார்டுகளிலும் கழிவுநீ£¢ வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டு கிரிமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாமல் இருப்பதற்கு மருந்துகள் அடிக்கப்பட்டது. கொசு பராவமல் தடுப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அம்மைநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்றும், வர்த்தக நிறுவனங்கள் போர்கால அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். எனவே அம்மைநாயக்கனூர் பகுதி பொதுமக்கள் அனைவரும் பேருராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து