ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: அரையிறுதியில் சரிதா, சோனியா

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விளையாட்டு
sarita-sonia semi 2017 11 6

ஹோ சி மின் சிட்டி : எட்டாவது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டியில், சரிதாதேவி மற்றும் சோனியா லாதர் அரையிறுதிக்கு நுழைந்தனர்.

8-வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் 64 கிலோ எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் எல்.சரிதாதேவி, உஸ்பெகிஸ்தானின் மாப்டுனாகோன் மெலிவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா லாதர் (57 கிலோ), கஜகஸ்தானின் நஸ்யிம் இசிஷனோவாவை தோற்கடித்து அரையிறுதியை எட்டினார். 69 கிலோ பிரிவில் இந்திய மங்கை லவ்லினா போர்கோஹைன் தன்னை எதிர்த்த மங்கோலியாவின் என்க்பாடாரை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியை எட்டிய மூன்று பேருக்கும் குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவின் மேரிகோம், பிரியங்கா, ஷிக்‌ஷா ஆகியோரும் அரையிறுதிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து