படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி

படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மேனிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 400-ம், மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முறையே ரூ.600, ரூ.750, ரூ.1000 வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. (கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின்மூலம் உதவித்தொகை பெற்றிருந்தால் பதிவுதாரர்கள் இவ்வலுவலகத்தின்மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பெறக்கூடாது).

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 30.09.2017-க்குள் மேற்கண்ட கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலமும், 30.09.2017 ஆம் தேதியின் நிலவரப்படி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட தகுதியுடையவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், ஏற்கனவே உதவித் தொகை பெறும் பயனாளிகளில், ஓராண்டு முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை 12 காலாண்டுகள் வழங்கப்படும் என்றும், இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்களுக்கு மீதமுள்ள காலாண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படமாட்டாது, இதனை தவிர்க்கும் பொருட்டு வேலைவாய்ப்பகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணம், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான ஒப்புகைச்சீட்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் வங்கிப்புத்தகத்தின் நகலை சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செ.பாஸ்கரன்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கிருஷ்ணகிரி.

 

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து