தி.மு.க.வுடன் பா.ஜ.க ஒருபோதும் கூட்டணி அமைக்காது: சுப்ரமணிய சுவாமி திட்டவட்டம்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
subramanian-swamy 2017 11 09

சென்னை: தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கக் கூடாது. பா.ஜ.க.வுடன் ஒருபோதும் தி.மு.க கூட்டணி அமைக்காது. ஸ்பெட்க்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருமே சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து