முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆசீயா மரியம் வழங்கினார்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      நாமக்கல்
Image Unavailable

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று(09.11.2017) நடைபெற்றது. இச்சிறப்பு மனுநீதி நாள் முகாமிற்கு கலெக்டர்மு.ஆசியா மரியம் தலைமையேற்று மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். இச்சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, வங்கி கடன்;கள், வேலை வாய்ப்புகள், மாதாந்திர உதவிதொகைகள், உதவி உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் என 180-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

நலத்திட்ட உதவிகள்

 

இச்சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோர்க்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ஒன்றிற்கு ரூ.1500 வீதம் ரூ.1,44,000 பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்க்கான உத்தரவு ஆணைகளையும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1500 வீதம் ரூ.1,26,000 பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்க்கான உத்தரவு ஆணைகளையும், தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1500 வீதம் ரூ.1,80,000 பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்க்கான உத்தரவு ஆணைகளையும், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 1 மாற்றுத்திறனாளிக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.1500 வீதம் ரூ.18,000 உதவித்தொகை பெறுவதற்க்கான உத்தரவு ஆணையினையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5200 வீதம் ரூ.10,400ஃ- மதிப்பிலான மோட்டர் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும் என இன்று நடைபெற்ற இச்சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,78,400 மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர்மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இச்சிறப்பு மனுநீதி நாள் முகாமில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்கள் உட்பட மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து