முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நாளை துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      நீலகிரி

64_வது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் நாளை துவங்குகின்றன. இது குறித்து நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

14 முதல் 20_ந் தேதி வரை

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14_ந் தேதி முதல் 20_ந் தேதி வரை கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோன்று இந்தாண்டுக்கான அகில இந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நாளை(14_ந் தேதி) துவங்குகிறது. விழாவையொட்டி கூட்டுறவுகளை எண் முறையாக்கல் மூலம் மக்களை ஆளுகை உடையோராக்கல் என்ற கருப்பொருளுடன் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனையொட்டி 14_ந் தேதி ஊட்டியிலுள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தாலுகாக்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவு கொடி ஏற்றுதல், மரக்கன்றுகள் நடும் விழாவும், 15_ந் தேதி ஊட்டி, குன்னூர், மாயார் மற்றும் கூடலூரில் ரத்ததான முகாம், மருத்துவமுகாம், அம்மா மருந்தகங்கள் சார்பில் சர்க்கரை நோய் தொடர்பான முகாமும், 16_ ந் தேதி ஊட்டி தாலுகாவில் பெந்தட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமும் நடக்கிறது.

சிறந்த சங்கங்களுக்கு பரிசு

வரும் 17_ந் தேதி ஊட்டி அண்ணா கலையரங்கில் கூட்டுறவு வாரவிழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 18_ந் தேதி நீலகிரி கூட்டுறவு நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகங்களின் நடமாடும் ரேசன் கடைகள் மூலம் குக்கிராமங்களுக்கு சென்று பொருட்களை விற்பனை செய்யும் மேளா, 20_ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர் கல்வித்திட்டம் மற்றும் உறுப்பினர் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாம் ஆகியவை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து