கந்தவர் கோட்டை.யில் குளங்கள் மற்றும் பாசன ஏரிகளை தூர் வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      புதுக்கோட்டை
kulam

புதக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகாவில் பொதுபணித்தறை மற்றும் ஊராட்சிகளுக்க உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் பாசன ஏரிகள் உள்ளன.தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழைவெள்ளத்தால் இயல்புநிலை பாதிக்கப்பட்டு .நிவாரணபணிகள் நடைபெற்று வருகின்றன.

கோரிக்கை

ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் போதுமான மழையில்லாமல் நீர் ஆதாரங்களான குளங்களும் ஏரிகளும் சேறும் சகதியுமாக குட்டைகள் போல காட்சியளி;க்கின்றன. குறிப்பாக கந்தர்வக்கோட்டை தாலுகாவில் உள்ள பொதுமக்கள் பயண்படுத்தும் குளங்களும்.பாசன ஏரிகளுக்கும் மழைநீர் வரும் வதத்துவாரிகள் தூர்வாரப்படாமலும்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதால் குறைந்த அளவே பெய்த மழைநீரும் குளங்களுக்கும் பாசன ஏரிகளுக்கும் செல்ல வழியல்லாமல் ஆங்காங்கே தேங்கி குட்டைகளாக காட்சியளிக்கின்றன.மழைபெய்தும் குளங்களும் ஏரிகளும் சேறும் சகதியுமாகவே காணப்படுகின்றன.மேலும் பாசன ஏரிகளில் நீரை போதுமான அளவிற்கு சேமித்து வைக்க தூர்வாராமலும் கரைகளை பலபடுத்தாமலும் உள்ளனர்.

கந்தர்வக்கோட்டை பகுதி விவசாளிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் இருந்து விடுபட போராடிவரகின்றனர்.எனவே மழைநீர் செல்லும் வரத்துவாரிகளை தூர்வாரியும்,ஆக்கிரமிப்புகளை அகற்றியும் பாசன குளங்களின் நீர் ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகள உற்சாகத்தோடு விவசாய பணிகள் தொடர அரசும் மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுப்பாளர்களா.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து