சங்கரன்கோவிலில் உள்ள அரசு பள்ளிகளில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருநெல்வேலி
minister rajalakshmi issue free laptop

சங்கரன்கோவிலில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

லேப்டாப் வழங்கும் நிகழ்வு

கடந்த 2016-17ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ராஜலெட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 529 மாணவிகளுக்கு லேப்டாப்பை வழங்கினார்.இதே போல் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற இலவல லேப்டாப் வழங்கும் நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் சுசீந்திரன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் நாராயணன், தமிழாசிரியர் சங்கர்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ராஜலெட்சுமி கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் 418பேருக்கு இலவச லேப்டாப் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். இதில் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் வேலுச்சாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து