பிறந்தநாளையொட்டி முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக பாசறை மாநில செயலாளர் செந்தில்குமரன் வழங்கினார்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      புதுச்சேரி
medical camp

அதிமுக பாசறை மாநில செயலாளர் செந்தில்குமரன் தனது பிறந்த நாளை முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார். அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் செந்தில்குமரன்  தனது பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாடினார். இதையொட்டி தனது பெற்றோர் ஆடிட்டர் சிங்காரவேலன் மற்றும் சந்தானலட்சுமி ஆகியோர் காலில்விழுந்து ஆசி பெற்றார்.  பின்னர் தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த  மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியல்      கலந்து   கொண்டு சாமி தரிசனம்செய்தார்.  இதன் பின்னர் சோலை நகர் மந்தைவெளி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற   சிறப்பு பூஜையில்கலந்து கொண்டார்.  இதையடுத்து   முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் வடக்கு, தெற்கு, வன்னியர் பகுதி, புயல் பாதுகாப்பு மையம், டிவி நகர், முத்தியால்பேட்டை மார்க்கெட், ஏழை மாரியம்மன் கோவில், பாரதிதாசன் கல்லூரி அருகில் மஞ்சினி நகர், அங்காளம்மன் நகர் உள்ளிட்ட 10 இடங்களில் செந்தில்குமரன் பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

இதை தொடர்ந்து   தனது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 1000 பேருக்கு புடவை, 100 பேருக்கு மூக்கு கண்ணாடி, ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை, ஏழைகள் வியாபாரம் செய்ய தள்ளுவண்டி, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஊனமுற்றோருக்கு உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்டவற்றை செந்தில்குமரன் வழங்கினார். மேலும் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு  மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.  இது போன்ற நரத்திட்ட உதவிகள் வழங்குவதால் முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் அவரை பல்லாண்டு வாழ்க என்றும், மேன்மேலும் இது போன்ற நலத்திட்ட  உதவிகள்வழங்க வேண்டும் என்றும் கூ  றினர். பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும ;நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக நடத்த ஏற்பாடு செய்திருந்;த    அதிமுக  நிர்வாகிகள  ; என்.ஆர்.சரவணன், ஜெ சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்கு செந்தில்குமரன் நன்றி தெரிவித்தார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து