முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் பகுதியில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி.

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,நவ,16: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் பிரதமர் மோடியின் பிரதான திட்டமான உஜ்வாலா யோஜனா இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி பாம்பன் பகுதியில் பா.ஜ.கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்றது.
 ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் பிரதமர் மோடியின் பிரதான திட்டமான உஜ்வாலா யோஜனா வின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு மாநில அரசு வழங்கி வருகிறது அதன் ஒரு பகுதியாக பாம்பன் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கு நிகழ்ச்சி பாம்பன் பத்திரகாளியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பா.ஜ.கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற பொறுப்பாளர் பவர் நாகேந்திரன் தலைமை வகித்து எரிவாயு இணைப்பு வழங்கு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பாம்பன் பகுதி பா.ஜ.கட்சியின் மூத்த  நிர்வாகி ராஜன்,கட்சியன் மாவட்ட விவசாயி அணி செயலாளர் கார்த்திகேயன்,மண்டபம் ஒன்றிய செயலாளர் முனிஸ்வரன்,பாம்பன் நகர் தலைவர் ராஜபாண்டி உள்பட நிர்வாகிகளும்,தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து