முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மலைப் பாதையில் பாறைகள் சரிந்தன

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியின்ஜி: சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் நேற்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்   மலைப் பாதையில் பாறைகள் சரிந்து கிடந்தன. மேலும்  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகி உள்ளது.

இதுகுறித்து சீன புவியியல் மையம் தரப்பில், இந்திய எல்லையோரத்தில் அமைந்துள்ள திபெத்தின் நியின்ஜி பகுதியில் நேற்று  அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது” என்று கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சினுவா (சீன செய்தி ஊடகம்) செய்தி வெளியிட்டுள்ளது. முதல் நில நடுக்கத்தை தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு, மீண்டும் அதே பகுதியில் மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து