தொடக்கபள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கியது

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      சென்னை
Thiruvettriyuri 2017 11 20

அசோக் லேலண்ட் சி.எஸ்.ஆர். ரோட்டுஸ்கூல் அமைப்பு சார்பில் திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 தொடக்கப்பள்ளியில் பயிலும் 7500 மாணவ மாணவிகளுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக ரொட்டி, பன், வாழைபழம் ஆகிய உணவு பொருட்களை வழங்கி வருகிறது.

உலக குழந்தை தினம்

இந்த நிலையில் நேற்று மீஞ்சூரை அடுத்த நெய்தவாயில் தொடக்கப்பள்ளி உட்பட 36 தொடக்கப்பள்ளிகளில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிற்றுண்டி வழங்கப்பட்டது. நெய்தவாயில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவன உதவி பொது மேலாளர்கள் வி.சுந்தர், டி.சுரேஷ், உதவி கல்வி இயக்குநர் முத்துலட்சுமி, தலைமைஆசிரியை பி.எஸ்.ஜெயந்தி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் என்.ஆர்.கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சிறந்த மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து