முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கான அனுமதி ஆணைகள் விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதநகர்.- விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக உலக கழிப்பறை தினம் 19.11.2017யை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 5000 தனிநபர் இல்லக்கழிப்பறைகள்; கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. மேலும், 19.11.17 அன்று ஒரே நாளில்  புதியதாக  5000 கழிப்பறைகள் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டது. அதனடிப்படையில்  இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 525 பயனாளிகளுக்கு  தனிநபர் இல்லக்கழிப்பறைகளும், திருவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 500 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 200 பயனாளிகளுக்கு தனிநபர் இல்;லக் கழிப்பறைகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 550 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 500 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 475 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 550 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 525 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 200 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 500 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 475 பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகளும் என மொத்தம் 5000 தனிநபர் இல்லக்கழிப்பறைகள் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
  அதனடிப்படையில் உலக கழிப்பறை தினத்தன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நாரணாபுரம் ஊராட்சியில், லட்சுமியாபுரம் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து, தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவது தொடர்பான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான அனுமதி ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். பின்னர் அந்த கிராமத்தில் பயனாளிகளுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
  மேலும், சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறையின் மூலமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு, எவ்வாறு, எந்தமாதிரியான சூழலில் உருவாகிறது  என்றும், டெங்கு கொசு உருவாகமால் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்வென்றும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்வென்றும் போன்ற விழிப்புணர்வு விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
  முன்னதாக வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டுதல் மற்றும் 100 சதவீத பயன்பாட்டினை அனைவரிடமும் வலியுறுத்திக் கூறுவேன், எனது கிராமம், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக மாறிட என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன், சோப்பினால் கைகழுவும் பழக்கத்தினை, நாள்தோறும் மேற்கொள்வேன் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய   - உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டனர்.
  இந்நிகிழ்ச்சியின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.திலகவதி, சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சத்தியமூர்த்தி,  வெள்ளைச்சாமி, சிவகாசி வட்டாட்சியர்  ஸ்ரீதர், அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து