ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      திருவண்ணாமலை
photo01

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி கலெக்டர், டிஆர்ஒ உள்ளிட்ட உயரதிகாரிகள் தினமும் காலையில் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் அக்டோபர் 5ந் தேதி முதல் தினமும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்கிறார்.

அதன் தொடர்ச்சியாக கீழ்பென்னாத்துர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னஒலைப்பாடி கிராமத்தில் பஜனை கோயில் தெருவில் ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் சிகிசச்சை முகாமினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்து வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழு உற்பத்தி தடுப்பு பணி நடவடிக்கைகளை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது ஒரு சில குடியிருப்பு பகுதிகளிலும் தெருக்களிலும் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களிடம் தெருவிளக்கு எரிகிறதா? குடிநீர் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். அப்போது அரசு மருத்துவர்கள் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கலெக்டர் பாதுகாப்பு கருதி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும்படி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.பி.மகாதேவனுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.பி.மகாதேவன், தனி அலுவலர் ரபியுல்லா, தாசில்தார் சுகுணா, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், அரசு மருத்துவர்கள் சிவப்பிரகாசம், தமிழ்ச்செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலட்சுமி, ஏ.அருட்செல்வம், ஒன்றிய பொறியாளர் சிவக்குமார், ஒன்றிய மேற்பார்வையாளர் கண்ணன், மண்டல துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் பிரவீன்பானு, ஊராட்சி செயலாளர்கள் டி.விஜயகணபதி, ஜி.வெங்கடேசன், இ.வேலு, எஸ்.பழனி, கே.கணேசன், எம்.சுகுமார், எஸ்.சௌந்தர்ராஜன், தனசேகர், இளவரசன், கிராம செவிலியர் தெய்வாணை ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து