கொடமாண்டப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
1

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கொடமாண்டப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார தூய்;மை பணிகளையும், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பது குறித்தும், விவசாய பாசனத்திற்கு நீர் செல்லும் கால்வாய் சீரமைக்கும் பணிகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேற்று (23.11.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

 

முன்னதாக கொடமாண்டி பட்டி கிராமத்தில், டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகளை வீடு வீடாக சென்று நீர் தேக்க தொட்டிகள், நீர் தேக்க டரம்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் லார்வா புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து நீர் தேக்க தொட்டிகளில் லார்வா புழுக்களை அழிக்கும் கம்பூசிய மீன்கள் விடும் பணிகளையும், அபேட் மருந்து தெளிக்கு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை காவலர் பணியாளர்கள், மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரை கொண்டு வீடுகளை சுற்றி பழைய தேவையற்ற பிளாஸ்டிகள் கழிவு பொருட்களை உடனடியாக அகற்றும் பணிகள் மற்றும் வீடுகளில் பிரிட்ஜில் கழிவு நீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர் தேக்க தொட்டிகளை நன்கு மூடி வைத்திருக்க வேண்டும்.

வீட்டை சுற்றி தூய்மையாக வைத்திருந்தால்தான் தேவையற்ற தொற்று நோய்கள் நமக்கு வரமால் பாதுகாத்துக்கொள்ள முடியும். தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு வரும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்தார். இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், ஆப்தாபேகம் ராஜசேகர், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து