முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(24-ந்தேதி) சுனாமி முன்எச்சரிக்கை பயிற்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு  தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது, இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன்  இணைந்து, ஆந்திப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள கடலோர மாவட்டங்களில், சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்ட மாதிரி பயிற்சியினை 24.11.2017 அன்று நடத்துகின்றது.  இப்பயிற்சியின் முன்னோட்டமாக, 22.11.2017 அன்று சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.தத்தா  வழிகாட்டுதலின்படி கடலோர மாவட்ட ஆட்சியர்கள், முப்படை அதிகாரிகள், காவல்துறை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முதன்மைச் செயலர் ஃ வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் 24.11.2017 அன்று நடைபெறவுள்ள மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எவ்வாறு மேற்கொள்வது என விளக்கினார்.  மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழுவின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.தத்தா அவர்கள், தயார் செய்யப்பட்ட விளக்க காட்சிகள் மூலம் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விளக்கினார்.
 சுனாமி வரும் பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன் அறிவிப்புகள் பெறப்படும் போது, அத்தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பதை 24.11.2017 அன்று நடைபெறும் ஒத்திகையின் மூலம் சோதிக்கப்படும். இம்மாதிரி பயிற்சி ஒத்திகையானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் வட்டம் - தேர்போகி குரூப்- கடற்கரை சத்திரம் மற்றும் கடலாடி வட்டம் - முந்தல் குரூப் - கீழமுந்தல் கிராமம் ஆகிய கடலோர கிராமங்களில் நடைபெறும். எனவே நாளை 24-ந் தேதி நடைபெறும் சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது ஒரு மாதிரி ஒத்திகை பயிற்சி மட்டுமே ஆகும்.  இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சம், பீதி அடைய தேவையில்லை என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து