தும்பலஅள்ளியில் தரம் உயர்;த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி: அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      தர்மபுரி
3

 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி தரம் உயர்;த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி துவக்க விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைப்பெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியை குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.

தரம் உயர்ந்த பள்ளி

 

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது :- புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியை குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நடப்பு கல்வி ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் 3 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாகவும், 4 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்டுள்ள தும்பலஅள்ளி உயர்நிலைப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க இடம் தேர்வு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் விரைவாக கட்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் கிராம புரங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் 14 வகையான உபகரணங்கள், பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் தருமபுரியில் மேலும் ஒரு கல்வி மாவட்டம் உருவாக்க படும் என அறிவித்துள்ளார்கள். தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வியை தமிழக அரசு தொடர்ந்து வழங்கும். இதனை நல்ல முறையில் மாணவ செல்வங்கள் எதிர் காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

 

இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் இராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவாகள்; டி.ஆர்.அன்பழகன், தொ.மு.நாகராஜன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆ.கோவிந்தசாமி, பழனிசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மாணிக்கம், கோபால், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பூக்கடை ரவி, முன்னாள் ஊராட்சித்தலைவர்கள்; செல்வராஜ், காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து