எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் நடைபெற்ற 50-வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.
தேசிய நூலக வாரவிழா
இந்நிகழ்வு ஒரு தலைசிறந்த நிகழ்வாகும். திறன்வாய்ந்த மனிதவளம் மிக்க மாநிலம் தமிழகம்தான். கட்டமைப்பில் தலைசிறந்த மாநிலம் தமிழகம்தான். மாவட்ட மைய நூலகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 2,624 புரவலர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 18,54,411 மொத்த நூல்கள் உள்ளன. நூலகத்தில் 1,90,965 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2016-17ல் 25,98,148 வாசகர்கள் நூலகத்திற்கு வருகை புரிந்து பல்வேறு நூல்களை நன்கு படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டுள்ளனர். 2016-17-ல் 22,62,281 நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 முதல்நிலை தேர்விலும், குரூப் - 2 ஏ முதல் நிலை தேர்விலும் நூலகம் வாயிலாக இலவசமாக பயிற்சியினை பெற்று இம்மாவட்டத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 22 பகுதி நேர நூலகமும், 47 ஊர்புற நூலகமும், ஒரு குழந்தை நூலகமும், 70 கிளை நூலகங்களும், ஒரு மாவட்ட மைய நூலகமும் என மொத்தம் 141 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் மைய நூலகத்தில் மட்டும் 1,64,560 நூல்கள் உள்ளன. மேலும் 23,105 உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மைய நூலகத்தில் 219 புரவலர்கள் உள்ளனர். 11 பெரும் புரவலர்கள் உள்ளனர். மைய நூலகத்திற்க 2016-17ல் 1,68,196 வாசகர்கள் வருகை புரிந்து பல்வேறு புத்தகங்களை நன்கு படித்து பயன்பெற்றுள்ளனர். 2016-17ல் 2,65,534 நூல்கள் பயன்பாட்டில் உள்ளன.எனவே, பள்ளி மாணவ மாணவிகளும் வாசகர்களாகிய பொதுமக்களும் தினந்தோறும் அருகிலுள்ள நூலகத்திற்கு சென்று பல்வேறு நூல்களை நன்கு படித்து தங்களது அறிவுத்திறனை உயர்த்திக்கொண்டு வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் 2016-17ம் ஆண்டிற்கான நல்நூலகர் விருது பெற்ற தொரப்பாடி நூலகர் ஆர்.பாலு அவர்களை தொழில்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். இதனை தொடர்ந்து 50-வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற பல்வேறுபோட்டிகளில் பெற்றிப்பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு தொழில்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் கடலூர் மாவட்ட நூலக அலுவலர் பெ.விஜயலட்சுமி வரவேறுப்பு பேசினார். இவ்விழாவில் மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் நல்நூலகர் ஆர்.சந்திரபாபு விளக்கவுரையாற்றினார்.இவ்விழாவில் புரவலர்கள் ஆர்.மோகன்ராஜா, எஸ்.சசிகுமார், என்.மணிகண்டன். பி.அசோக்குமார், ஜி.வினோத்குமார், இராமச்சந்திரன் மற்றும் பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகத்தை சேர்ந்த பணியாளர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவின் இறுதியில் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் நல்நூலகர் கோ.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |