முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் உலக மண்வள தின கருத்தரங்கு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

 தேனி.- தேனி மாவட்டம், வீரபாண்டியில் வேளாண்மைத்துறையின் சார்பில் உலக மண்வள தின கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது.
  கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
 பூமியில் உயிர் வாழ்வதற்கு உற்பத்தி பெருக்கத்திற்கும் மண் தான் அடிப்படை ஆதாரமாகும். மண்ணின் வளம் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-5 நாள் உலக மண் வள தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் உணவு உற்பத்திக்கு மண் அடிப்படை ஆதாரமாகும். மண் வளம் பாதுகாப்பு நம் அனைவரது கடமையாகும். எனவே, மண்வள பாதுகாப்பை விலியுறுத்துவதற்கு இந்த உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மண்வளத்தை அதிகரிக்கும் நோக்கமாக தேசீய மண்வள இயக்கம் மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு அதிக அளவு இராசயன உரமிடுதல், இயற்கை உரமிடுவது குறைந்து வருவதால் மண்ணில் சமச்சீர் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, மண்ணின் தன்மை அறிந்து பயிரின் தேவைக்கேற்ப உரமிடுவதற்கு அனைத்து விவசாய நிலங்களிலும் வேளாண்மைத்துறை அலுவலர்களால் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு மண் பரிசோதனை நிலையங்களில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிர்களுக்கு உரப் பரிந்துரை செய்யப்பட்டு மண் வள அட்டைகளாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்திட தேவையான வழிமுறைகளைப் பெறலாம்.
  மாவட்டத்தில் நடப்பாண்டில் 14600 மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் 71345 விவசாயிகளுக்கு மண் வளஅட்டை வழங்கப்பட்டுள்ளது. மண்ணில் குறைபாடு இருப்பின் மண்வள அட்டை மூலம் தெரிவித்து அக்குறைகளை நிவர்த்தி செய்து மண்வளத்தை மேம்படுத்திட முடியும். எனவே, விவசாயிகள் மண்வளமே மனித வளம், மண்ணை ஆய்வு செய்வோம், மண் வளத்தை பாதுகாப்போம் போன்ற கருத்துக்களை கருத்தில் கொண்டு மண் வளத்தை மேம்படுதிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவத்தார்.
  இக்கருத்தரங்கில்,  வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர்  விஷ்ணுராம் மேத்தி   உட்பட பலர் கலந்து கொண்டார்கள். விழா நிறைவாக மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்  சங்கர்  நன்றியுரையாற்றினார்.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து