முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு தமிழ அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்திட ஜனவரி 31-ம் தேதி வரை கால நீட்டிக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கால அவகாசம்
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட ஓக்கி புயல் தாக்குதல் மற்றும் கனமழையின் காரணமாக மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும்ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு 30-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்களுக்கு, வழங்கப்பட்ட காலக் கெடு டிசம்பர் 18-ம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது.

மக்கள் கோரிக்கை
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அபராதத் தொகை ஏதுமின்றி மின் கட்டணத்தை செலுத்திட வரும் 2018 ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து