பெரம்பலூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் வே.சாந்தா, தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      பெரம்பலூர்
pro pmb

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், நேற்றைய தினம் (10.12.2017) அரசு விடுமுறை தினம் என்பதால், நேற்று (11.12.2017) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் வே.சாந்தா. தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் "இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மற்றும் மாறாக பற்றுறுதி மிக்கவனாக இருப்பேன் என்றும், அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும், எவ்வித வேறுபாடுமின்றி, மனித உரிமைகளையும் அனைவரின் சுயமரியாதையும் மதித்து நடப்பேன் என்றும், என்னுடைய சொல் அல்லது செயல் அல்லது எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறமாட்டேன் என்றும், மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நான் எப்போதும் கடமைப் பற்றுறுதி மிக்கவராக இருப்பேன்" என்று அனைத்து அலுவலர்களும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உறுதி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) (பொறுப்பு) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் அலுவலர் பாண்டியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து