முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெறுகிறது - உறுதிசெய்தது பி.சி.சி.ஐ

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை சிறப்பு பொதுக்கூட்டத்தில் உறுதி செய்தது. மேலும், இந்திய அணியின் எதிர்கால சுற்றுபயணங்களுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி

முதல் முறையாக முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்டாகும் இது, இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் சேர்ந்தே நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2023-ல் முதல்முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இந்தியாவில் நடைபெறுகிறது.

81 போட்டிகளில் ...

இதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019-20-ல் ஆப்கானுடன் இந்திய அணி இங்கு டெஸ்டில் ஆடுகிறது. அதே போல் 2019-23-ம் ஆண்டுகளில் இந்திய அணி 81 போட்டிகளில் உள்நாட்டில் ஆடுகிறது (அனைத்து வடிவங்களும் சேர்த்து), இது குறைக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, விளையாடும் நாட்கள் எண்ணிக்கை 306ஆக குறைக்கப்பட்டுள்ளது.

158 போட்டிகளில் ...

இந்திய அணியின் எதிர்கால சுற்றுபயணங்களுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 ஆண்டுகளில் 158 போட்டிகளில்  விளையாடும் கிரிக்கெட் கால  அட்டவணை தாயாராகி உள்ளது. இதில் 81 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்.  இந்த கால அட்டவணையில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளன. ஜூன் மாதத்தில்  இருந்து 5 ஆண்டுகள் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் என பி.சி.சி.ஐ. அறிவித்தது. உலகளாவிய ஸ்மார்ட் போன் உற்பத்தியாளரான விவோ ரூ. 2199 கோடி  ஏலத்தில் எடுத்தது.  முந்தைய ஒப்பந்தத்தில் இருந்து இது 554 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து