கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

12 sivagangai news

சிவகங்கை -சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி, மிக்கேல்பட்டிணம் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.க.லதா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
             இக்கிராமச் சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்தாவது,
             சிவகங்கை மாவட்டத்தில் செப்டம்பர்’2011 முதல் மார்ச்’2017 வரை 68 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 3,403 குடும்பங்களுக்கு தலா விலையில்லா ஒரு பசு மற்றும் ஒரு கன்று வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2017-2018) 50 பயனாளிகள் வீதம் 13 கிராம பஞ்சாயத்துக்களுக்கு 650 இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு, நவம்பர்’2017 வரை 300 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசு மற்றும் கன்று வழங்கப்பட்டுள்ளது.
            ஜனவரி’2018 சிவகங்கை வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மிக்கேல்பட்டிணம் பஞ்சாயத்தில் 50 பயனாளிகளுக்கும், காரைக்குடி வட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் காவத்துக்குடி பஞ்சாயத்தில் 50 பயனாளிகளுக்கும்,  பிப்ரவரி’2018 காரைக்குடி வட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், காரை பஞ்சாயத்தில் 50 பயனாளிகளுக்கும், காரைக்குடி வட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெற்றிவயல் பஞ்சாயத்தில் 50 பயனாளிகளுக்கும், சிவகங்கை வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், முதுவந்திடல் பஞ்சாயத்தில் 50 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 5 கிராமங்களில் 250 பயனாளிகளுக்கு வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   
           அதனடிப்படையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மிக்கேல்பட்டிணத்தில் 50 பயனாளிகள் செய்யப்பட உள்ளனர். அவர்களின் தகுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
1. மகளிராக இருக்க வேண்டும்.
2. கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
3. குடும்பத்தின் பெயரிலோ அல்லது தன் பெயரிலோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது.
4. சொந்தமாக பசு அல்லது எருமை இருக்கக் கூடாது.
5. விலையில்லா செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது.
6. பயனாளிகளின் குடும்பத்தினர் அரசு ஊழியராகவோ அவற்றை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் அமைப்புகளில் உறுப்புனராக இருக்கக் கூடாது.
7. விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
8. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் 30மூ  ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ஆதிதிராவிடர்களுக்கு 29மூ இ  பழங்குடியினர் 1மூ ) ராக இருக்க வேண்டும்.       என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
          இக்கூட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கருணாகரன், உதவி இயக்குநர் மோகன்தாஸ், சிவகங்கை வட்டாட்சியர் கந்தசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து