திருவண்ணாமலை அருகே கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார்களை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே அகரம் கிராமத்தற்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணற்றின் மோட்டார்களை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமியிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில் பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் பா.சுப்ரமணியன் , மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பானு, மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் சுயதொழில் கடனுதவி, வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.

பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் உதவிகளையும் உதவி உபகரணங்களையும வழங்க வேண்டும் என்றார் இந்நிலையில் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளிக்க தி.மலை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி (திமுக) மாவட்ட அமைப்பாளர் மா.சண்முகசுந்தரம் தலைமையில் அகரம் கிராம பொதுமக்கள் கிராமத்துக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணற்றின் மோட்டார்களை சேதப்படுத்தியவரகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம் கிராமத்தில் 400 குடும்பங்கள் ஆதிதிராவிடர் காலனியில் 250 குடும்பங்கள் உள்ளன. நாரையூர் அகரம் செல்லும் சாலையில் தென்புறம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு புறம்போக்கு இடத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு மோட்டார்களை இயக்குவதற்காக 2 அறைகள் கட்டப்பட்டுள்ளது. 2 ஆழ்துளை கிணற்றில் இருந்து ஒரு ஆழ்துளை கிணற்றின் நீர் குடிநீருக்காகவும் ஒரு ஆழ்துளை கிணறு காலனிக்கும் குடிநீர் வழங்கிவந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணறு பக்கத்தில் சொந்தமான பட்டா நிலம் வைத்துள்ள அய்யப்பன் மகன் கல்யாண சுந்தரம் என்பவர் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் தேவைகளில் தனது நீராதாரம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து ஆழ்துளை கிணற்றின் பைப்பை உடைத்தும் மோட்டார்களையும் சேதப்படுத்தியும் வருகின்றார். 2 ஆழ்துளை கிணறு மோட்டார் இயக்குவதற்காக கட்டப்பட்ட 2 அறைகளுக்கு பக்கத்தில் சுற்றியிருந்த மண்களை ஜேசிபி இயந்திரம் வைத்து அப்புறப்படுத்தியுள்ளார். இதனால் 2 அறைகளும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காலனிக்கு செல்லும் ஆழ்துளை கிண மின்மோட்டார் பைப்பை வேண்டுமென்றே உடைத்துள்ளார். இதனால் காலனி மக்கள் பெரும் சிரமத்துக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.

நடவடிக்கை

எனவே இதுகுறித்து விசாரணை செய்து பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிர்வாகத்தின் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக சேதப்படுத்திவரும் கல்யாணசுந்தரத்தின்மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் ஆதாரத்தினை சரி செய்ய வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல திருவண்ணாமலை பகுதியில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு நாச்சானந்தல் கிராமத்தில் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அரசு சார்பில் வீடு கட்டி தர கோரி மீனவ சமூகத்தினர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தனசாமி இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து