சர்க்கரை நோயாளிகளுக்கான புதிய கருவி:வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அறிமுகம் செய்தார்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வேலூர்
VIT

பெங்களூரில் உள்ள டிஎம்ஐ சிஸ்டம் நிறுவனத்துடன் விஐடி இணைந்து டயாபடிக்ஸ் நோயாளிகளின் உடல் நிலை மருத்துவ கவனிப்பின் முன்னேற்றங்கள் மற்றும் பாதிப்புக்கள் சம்மந்தமான தகவல்களை தொலை மருத்துவ முறையில் மருத்துவர்களுக்கு அனுப்புவதற்கான InDiaTel என்கிற புதிய தொழில்நுட்ப கருவியினை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் விஐடியில் அறிமுகம் செய்தார்.

புதிய கருவி

விஐடியின் செலக்ட் என்கிற ஸ்கூல் ஆப் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பெங்களூரில் உள்ள TMI சிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து டயாபடிக்ஸ் (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கான InDiaTel என்கிற புதிய தொழில்நுட்ப கருவியினை முதன் முதலாக நாட்டில் உருவாக்கியுள்ளது. இந்த கருவியானது டயாபடிக்ஸ் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ கவனிப்பில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் பாதிப்புக்கள் பற்றிய தகவல்களை மருத்துவர்கள் அறிந்து கொள்ளவதற்கான கம்பியில்லா வசதியுடன் கூடிய தொலை மருத்துவ மருத்துவ முறையிலான கருவியாகும்.

அண்மையில் விஐடியின் ராஜாஜி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுஜிசி மற்றும் ஏஐடிஇசி குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அறிமுகம் செய்து வெளியிட்டார். அதனை பெங்களூரு TMI Systems நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் ரங்கன் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியில் விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்த் A. சாமுவேல், ஸ்கூல் ஆப் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பள்ளி டீன் முனைவர் பி.அருள்மொழிவர்மன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து